திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : செவ்வாய், 26 டிசம்பர் 2017 (15:36 IST)

ஆம்புலன்ஸில் மது; பெல்லி டான்ஸ்; சர்ச்சையை ஏற்படுத்திய மருத்துவ கல்லூரி விழா

உத்தரபிரதேச மாநிலத்தில் முன்னாள் மருத்துவ கல்லூரி மாணவர்கள் சந்திப்பு விழாவில் பெல்லி டான்ஸ் நடைபெற்றது மற்றும் மருத்துவமனை ஆம்புலன்ஸில் மது கொண்டு வரப்பட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

 
உத்தரபிரதேச மாநிலம் மீரட்டில் உள்ள லாலா லாஜ்பாத் ராய் மருத்துவ கல்லூரியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு விழா கொண்டாடப்பட்டுள்ளது. அதில், 1992ஆம் பேட்ஜ் படித்த மருத்துவர்கள் கலந்து கொண்டனர். இந்த விழாவில் ரஷ்ய பெல்லி டான்ஸ் நடைபெற்றுள்ளது. 
 
மேலும் மருத்துவமனை ஆம்பூலன்ஸ் மூலம் மதுபாட்டில்கள் கொண்டு வரப்பட்டது. இந்த சம்பவம் தற்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்த வீடியோவும் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இந்நிலையில் இதுகுறித்து விசாரணை நடத்த கல்லூரி முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.