வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: வியாழன், 26 டிசம்பர் 2024 (11:48 IST)

சொர்க்க வாசல் தரிசன டிக்கெட் கிடைக்கவில்லை.. திருப்பதி தேவஸ்தானம் அறிவித்த மாற்று ஏற்பாடு..!

tirupathi
திருப்பதியில் சொர்க்கவாசல் தினத்தில் தரிசன டிக்கெட் கிடைக்காதவர்களுக்கு மாற்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

ஜனவரி 10ஆம் தேதி சொர்க்கவாசல் திறக்கப்பட இருப்பதை அடுத்து, ஜனவரி 10ஆம் தேதி முதல் 19ஆம் தேதி வரை 10 நாட்களுக்கு பக்தர்கள் அனுமதிக்கப்பட உள்ளனர். இதற்கான டிக்கெட் நேற்று ஆன்லைனில் வெளியான போது, 25 நிமிடத்தில் சுமார் 1.40 லட்சம் டிக்கெட்டுக்கள் விற்று தீர்ந்தன.  டிக்கெட் பெறுவதற்காக காத்திருந்த 14 லட்சம் பக்தர்கள் ஏமாற்றம் அடைந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், சொர்க்கவாசல் தரிசனத்திற்காக ஜனவரி 10, 11, 12 ஆகிய தேதிகளில் 1.20 லட்சம் இலவச தரிசன டோக்கன்கள் ஜனவரி ஒன்பதாம் தேதி காலை 5 மணி முதல் வழங்கப்படும் என்றும், மூன்று நாட்களுக்கான டோக்கன் முடிந்த பின்னர் அந்தந்த நாட்களுக்கு உரிய டோக்கன் முந்தைய நாள் வழங்கப்படும் என்றும் தேவஸ்தானம் அறிவித்துள்ளது.

ஆன்லைனில் சொர்க்கவாசல் தரிசன டிக்கெட் கிடைக்காதவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பக்தர்கள் தங்கள் ஆதார் அட்டையை காண்பித்து டோக்கன் பெற வேண்டும் என்றும், பக்தர்களுக்கு புகைப்பட அடையாளத்துடன் கூடிய டோக்கன் வழங்கப்படும் என்றும் தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


Edited by Mahendran