திங்கள், 3 பிப்ரவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: வியாழன், 23 ஜனவரி 2025 (14:33 IST)

வாய்ஸ் கால், எஸ்.எம்.எஸ்-க்கு மட்டும் புதிய திட்டங்கள்: ஏர்டெல், ஜியோ அறிவிப்பு..!

தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்களான ஏர்டெல் மற்றும் ஜியோ வாய்ஸ் கால் ,எஸ்எம்எஸ் ஆகியவற்றுக்கு மட்டும் புதிய திட்டங்களை அறிவித்துள்ளது.
 
தொலைதொடர்பு நிறுவனங்கள் டேட்டா உடன் கூடிய ரீசார்ஜ் திட்டங்களை மட்டுமே பயன்பாட்டில் வைத்திருக்கும் நிலையில் ஆண்ட்ராய்டு போன் இல்லாத சாதாரண மொபைல் போன் வைத்திருப்பவர்களுக்கு, வாய்ஸ் கால் மட்டும் தேவைப்படுபவருக்கு டேட்டா உடன் ரீசார்ஜ் செய்வதால் எந்தவித பலனும் இல்லை என்று குற்றம் சாட்டப்பட்டது.
 
இதை அடுத்து டிராய் அமைப்பு, வாய்ஸ் கால்  மட்டும் உள்ள திட்டங்களை அறிமுகப்படுத்த உத்தரவு பிறப்பித்திருந்தது. இந்த உத்தரவின் அடிப்படையில் சில வழிகாட்டு நெறிமுறைகளும் வெளியிடப்பட்டிருந்த நிலையில் ஜியோ மற்றும் ஏர்டெல் நிறுவனங்கள் டேட்டா இல்லாமல் வாய்ஸ் கால் எஸ்எம்எஸ் வசதிக்கு மட்டும் புதிய ரீசார்ஜ் திட்டங்களை வெளியிட்டுள்ளது.  இந்த திட்டங்கள் குறித்த தகவல்கள் இதோ
 
 ஜியோவில் ரூ. 458 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்தால் 84 நாட்களுக்கு அன்லிமிடெட் வாய்ஸ் கால் மற்றும் 1,000 எஸ்எம்எஸ் வழங்கப்படுகிறது. 
 
 இதேபோல ஓராண்டுக்கு ரூ. 1,985 -க்கு அன்லிமிடெட் வாய்ஸ் கால், 3,600 எஸ்எம்எஸ் உள்ளடக்கிய திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 
 
 ஏர்டெல் நிறுவனமும் 2 புதிய திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது.ரூ. 509 -க்கு 84 நாள்கள் அன்லிமிட்டெட் வாய்ஸ் கால் மற்றும் 900 எஸ்எம்எஸ்-கள்.
 
ரூ. 1,999 -க்கு ஓராண்டுக்கு அன்லிமிட்டெட் வாய்ஸ் கால் மற்றும் 300 எஸ்எம்எஸ்-கள் இலவசம். போன் அழைப்புகளை மட்டுமே பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்கு இந்தத் திட்டம் உதவும் என்பது குறிப்பிடத்தக்கது.

Edited by Mahendran