1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: வியாழன், 27 மே 2021 (10:49 IST)

தமிழ் உள்ளிட்ட 7 பிராந்திய மொழிகளில் பொறியியல் பாடங்கள்!

தமிழ் உள்ளிட்ட 7 பிராந்திய மொழிகளில் பொறியியல் பாடங்களை கற்பிக்க அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சில் அனுமதி வழங்கியுள்ளது. 

 
கல்லூரிகளில் பொறியியல் பாடங்கள் தற்போது ஆங்கிலத்தில் மட்டுமே நடத்தப்பட்டு வருகின்றன. இதன் காரணமாக பள்ளிகளில் தாய் மொழியில் கல்வி பயிலும் மாணவர்கள் ஆங்கிலத்தில் மட்டுமே பொறியியல் படிக்க வேண்டும் என்ற கட்டாயம் உருவாகியுள்ளது. 
 
இந்நிலையில் வரும் கல்வியாண்டு முதல் பொறியியல் பாடங்களை தமிழ் உள்ளிட்ட 7 பிராந்திய மொழிகளில் கற்பிக்க  அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சில் அனுமதி அளித்துள்ளது. அதன்படி, தமிழ், இந்தி, தெலுங்கு, குஜாராத்தி, மராத்தி, கன்னடம் உள்ளிட்ட 7மொழிகளில் வரும் கல்வியாண்டு முதல் பொறியியல் பயிலலாம்.