1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva
Last Updated : திங்கள், 10 ஜூலை 2023 (15:59 IST)

செய்தி வாசிப்பாளர் ஆனது லிசா என்னும் ஏஐ தொழில்நுட்பம்.. இந்த வேலையும் போச்சா?

ஏஐ தொழில்நுட்பம் என்று கூறப்படும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் கிட்டத்தட்ட அனைத்து துறைகளிலும் நுழைந்துவிட்ட நிலையில் தற்போது செய்தி வாசிப்பாளர் துறையிலும் நுழைந்துவிட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 
 
ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த தனியார் செய்தி நிறுவனம் ஒன்று ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி லிசா என்னும் செய்தி வாசிப்பாளரை அறிமுகப்படுத்தி உள்ளது 
 
இந்த ஏஐ தொழில்நுட்ப செய்தி வாசிப்பாளர் ஆங்கிலம் மற்றும் ஒடிசா மொழிகளில் செய்தியை வாசிக்கின்றது. அதுமட்டுமின்றி 18 மொழிகளில் லிசா செய்தி வாசிக்கும் திறமை உள்ளது என்றும் கூறப்படுகிறது. 
 
ஏற்கனவே பல்வேறு துறைகளில் மனிதர்களின் வேலையை ஏஐ தொழில்நுட்பம் பறித்துள்ள நிலையில் தற்போது செய்தி வாசிப்பாளர் துறையிலும் நுழைந்து விட்டதால் அந்த துறையில் உள்ள பணியாளர்களின் வேலையும் பறிபோக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
 
Edited by Siva