திருமணம் முடிந்தவுடன் மணப்பெண்ணிடம் நூறு ரூபாய் பத்திரத்தில் கையெழுத்து வாங்கி டீல் போட்ட மணமகனின் நண்பர்கள் பட்டாளம்!
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே தென்பாதியை சேர்ந்தவர் ராஜா, இவரது மகன் முத்துக்குமார் இன்ஜினியரிங் படித்து முடித்து, தற்போது மயிலாடுதுறையில் உள்ள தனியார் கம்பெனி வேலை பார்த்து வருகிறார், இவருக்கும் குறிஞ்சிப்பாடியை சேர்ந்த பவித்ரா என்பவருக்கும் பெற்றோர்கள், உறவினர்கள், நண்பர்கள் முன்னிலையில் தென்பாதிகள் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் திருமணம் நடைபெற்று முடிந்தது, திருமணத்திற்கு வந்த உறவினர்கள் வாழ்த்தி சென்ற நிலையில், உடன் படித்த நண்பர்கள் ஒன்று சேர்ந்து 100 ரூபாய் பத்திரத்தில் ஒப்பந்தம் ஒன்றை போட்டுள்ளனர்.
அதில் திருமணத்திற்கு பிறகு எப்போதும் போல நண்பர்களுடன் சேர்ந்து வெளியே செல்வதற்கும், வெளியூர் சுற்றுலாவிற்கு செல்வதற்கும் தடை விதிக்காமல் நண்பர்களுடன் என்ஜாய் பண்ணுவதற்கு தடையாக இருக்க மாட்டேன் என மணப்பெண் பவித்ராவிடம் திருமணம் முடிந்த கையோடு பத்திரத்தில் கையெழுத்து வாங்கிய நண்பர்கள் பட்டாளம்,மைனா படத்தில் வரும் காட்சிகளைப் போல வெளியில் செல்லும் கணவனை நிம்மதியாக இருக்க விடாமல் எப்ப வருவீங்க,எப்ப வருவீங்க என டார்ச்சர் அனுபவிக்க கூடாது என்பதற்காக நண்பர்கள் எடுத்த புதுவிதமான யுத்தியாகும்.
திருமணத்திற்கு வந்த அனைவரையும் ஆச்சரியத்தையும், மகிழ்ச்சியையும் ஏற்படுத்திய பத்திரம் கையெழுத்து முறையை கண்டு வியந்தனர்.
திருமணத்திற்கு வந்த பலர் தங்களுக்கு இது போல பத்திரம் கையெழுத்து எனது நண்பர்கள் வாங்கவில்லையே என ஏக்கத்துடன் சென்றனர்.