புதன், 27 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: சனி, 17 ஜூன் 2023 (12:03 IST)

குஜராத்தை கடந்து ராஜஸ்தானை நோக்கி செல்லும் பிபர்ஜோய் புயல்.. பெரும் சேதம்..!

தென்கிழக்கு அரபிக்கடலில் தோன்றிய பிபர்ஜோய்  புயல் குஜராத்தை கடந்த நிலையில் அங்கு மிகப்பெரிய சேதத்தை உண்டாக்கியது. இந்த நிலையில் தற்போது அந்த புயல் வலுவிழந்து ராஜஸ்தான் மாநிலத்தை நோக்கி சென்று கொண்டிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளன. 
 
தென்கிழக்கு அரபிக் கடலில் அதிதீவிர புயலாக மாறிய பிபர்ஜோய் புயல், குஜராத் மாநிலம் கட்ச் என்ற மாவட்டத்தில் கரையை கடந்தது. இந்த புயலால் அங்கு மிகப்பெரிய சேதம் ஏற்பட்டதாகவும் இதனை அடுத்து 24 மணி நேரமும் மீட்பு நடவடிக்கை மேற்கொண்டு வருவதாகவும் கூறப்படுகிறது. குறிப்பாக சாய்ந்த மின்கம்பங்கள் சரி செய்யப்பட்டு மின் இணைப்புகள் துண்டிக்கப்பட்ட பகுதிகளுக்கு மின் இணைப்புகள் வழங்கப்பட்டு வருவதாகவும் தகவல் வெளியாகி உள்ளன. 
 
மேலும் நூற்றுக்கணக்கான வீடுகள் சேதம் அடைந்திருப்பதால் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டிருக்கும் பொதுமக்கள் இன்னும் தங்கள் வீடுகளுக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் இன்று கட்ச் பகுதியில் நிவாரண பணிகளை மத்திய அமைச்சர் அமித்ஷா நேரில் ஆய்வு செய்ய உள்ளார். 
 
இந்த நிலையில் குஜராத்தை கடந்து வலுவிழந்த நிலையில் பிபர்ஜோய் புயல் ராஜஸ்தானை  நோக்கி பெரிய சேதம் எதுவும் இல்லை என்ற தகவல் வெளியாகியுள்ளன.
 
Edited by Mahendran