செவ்வாய், 31 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: செவ்வாய், 21 மே 2019 (21:55 IST)

பாஜக அணியில் அதிமுக-திமுக! அமித்ஷாவின் பலே திட்டம்

இதுவரை தமிழக வரலாற்றில் நடக்காத ஒரு விஷயத்தை அமித்ஷாவின் முயற்சியால் நடந்துவிடும் போல் தெரிகிறது. ஆம், ஒரே அணியில் எதிரெதிர் துருவங்களான அதிமுக, திமுக ஆகிய இரண்டு கட்சிகளும் இருக்க வாய்ப்பு இருப்பதாக டெல்லி வட்டாரங்கள் கூறுகின்றன
 
பாஜக மீண்டும் ஆட்சி அமைக்க எந்த லெவலுக்கும் இறங்கும் என்றும் அதற்கான திட்டங்களை அமித்ஷா செய்து வருவதாகவும் செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றது. அந்த வகையில் தமிழகத்தில் கருத்துக்கணிப்பு கூறியதுபோல் திமுக கூட்டணி 25 தொகுதிகளிலும், அதிமுக கூட்டணி 13 தொகுதிகளிலும் வெற்றி பெற்றால் இருதரப்பிடமும் பேச்சுவார்த்தை நடத்தி இரண்டு கட்சிகளையும் பாஜக கூட்டணியில் இணைக்கும் திட்டம் ஒன்று அமித்ஷாவிடம் இருக்கின்றதாம்
 
அமைச்சர் பதவி உள்ளிட்ட ஒருசில சலுகைகளை காட்டினால் இரண்டு கட்சிகளும் இதற்கு சம்மதம் தெரிவிக்கும் என்றும் அமித்ஷா தரப்பினர் கூறி வருகின்றார்களாம். ஆனால் இதெல்லாம் சாத்தியமே இல்லை, அதிமுக இருக்கும் அணியில் திமுக எந்தநாளும் இருக்காது என்று திமுக தரப்பினர் மறுப்பு தெரிவித்து வருகின்றனர். எனவே இந்த செய்தி வதந்தியா? அல்ல்து உண்மையா? என்பதை இன்னும் இரண்டு நாட்கள் பொறுத்திருந்து பார்ப்போம்