தங்கத்தை மறைத்து வைத்து கடத்துவதை கற்று கொண்டது எப்படி? நடிகை ரன்யா வாக்குமூலம்..!
கன்னட நடிகை ரன்யா ராவ் சமீபத்தில் துபாயிலிருந்து பெங்களூருக்கு திரும்பியபோது, சுமார் 15 கிலோ தங்கம் கடத்தியதாக கைது செய்யப்பட்டார். தற்போது, அவரிடம் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்த சூழலில், காவல்துறைக்கு அளித்த வாக்குமூலத்தில், "மார்ச் 1ஆம் தேதி, எனக்கு வெளிநாட்டில் இருந்து ஒரு அழைப்பு வந்தது. துபாய் விமான நிலையத்தில் தங்கத்தை பெற்று, பெங்களூருக்கு கொண்டு செல்ல வேண்டும் என கூறினர். இது முதல் முறையாக நான் இவ்வாறு செய்கிறேன். இதற்கு முன்பு, தங்கத்தை கடத்தியதோ வாங்கியதோ இல்லை.
தங்கத்தை மறைத்து கடத்தும் முறைகளை யூடியூபில் பார்த்து அறிந்தேன். விமான நிலையத்தில் இருந்து பேண்டேஜ்கள் மற்றும் கத்தரிக்கோல்கள் வாங்கி, கழிப்பறையில் தங்கக் கட்டிகளை என் உடலில் ஒட்டியபின், பேண்டேஜ் மூலம் மூடினேன்.
என்னை தொடர்புகொண்ட நபர் யார் என்பது தெரியாது. என்னிடம் தங்கம் கொடுத்தவரும் உடனே வெளியேறிவிட்டார். அவரை இதற்கு முன்பு பார்த்ததுமில்லை. என்று வாக்குமூலம் கொடுத்துள்ளார். இதனையடுத்து, அவரிடம் மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது.
Edited by Mahendran