செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sinoj
Last Modified: வியாழன், 29 பிப்ரவரி 2024 (14:40 IST)

விண்வெளி செல்லும் வீரரை மணந்தார் நடிகை லெனா!

lena -prashanth balakirshnan
சுகன்யான் திட்டம் மூல்ம விண்வெளிக்குச் செல்லும் கேரள விமானி பிரசாந்த் பாலகிருஷ்ணனை  நடிகை  லெனா கடந்த ஜனவரி 17 ஆம் தேதி திருமணம் செய்து கொண்டார்.
 
சுகன்யான் திட்டம் மூலம் விண்வெளி செல்லும் சென்னையைச் சேர்ந்த விமானப்படை குருப் கேப்டன் அஜித் கிருஷ்ணன், கேரள மாநிலத்தைச் சேர்ந்த விமானி பிரசாந்த் பாலகிருஷ்ணன்,  உத்தரபிரதேசத்தை சேர்ந்த அங்கத் பிரதாப்,  சுன்சு சுக்லா ஆகியோரின் பெயரை பிரதமர் மோடி அறிவித்தார்.
 
இந்த நிலையில் கேரள விமானி பிரசாந்த்  பாலகிருஷ்ணனை  நடிகை  லெனா கடந்த ஜனவரி 17 ஆம் தேதி திருமணம் செய்து கொண்டார்.
 
இதுகுறித்து அவர் யாருக்கும் தகவல் தெரிவிக்கவில்லை. 
 
ஆனால், பிரதமர் மோடி, சுகன்யான் திட்டத்தில் விண்வெளி செல்லும் வீரர்களின் பெயரை அறிவித்ததும் தன் வலைதள பக்கத்தில் தன் திருமணம் பற்றி தெரிவித்தார்.
 
அதில், எங்கள் திருமணம் பாரம்பரிய முறைப்படி   நடந்தது.  என் கணவரின் சாதனை, தேசத்திற்கும், கேரளாவுக்கும் பெருமை தேடித்தரும் என்று மகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.
இவர்களுக்கு சினிமாத்துறையினர் மற்றும் ரசிகர்கள் வாழ்த்துகள் கூறி வருகின்றனர்.