பேருந்து மீது மோதிய சரக்கு லாரி..நெடுஞ்சாலையில் கோர விபத்து
ராஜஸ்தான் மாநிலத்தில் பேருந்து மீது சரக்கு லாரி ஒன்று மோதியதில் 14 பேர் பலியாகியுள்ளனர்.
ராஜஸ்தான் மாநிலம், பிகானர் மாவட்டம் துங்கர்கர் பகுதியில் அமைந்துள்ள நெடுஞ்சாலையில் ஜெய்ப்பூரிலிருந்து பிகானீர்க்கு இன்று அதிகாலை பயணிகளை ஏற்றிக்கொண்டு பேருந்து சென்றுகொண்டிருந்தது.
அப்போது திடீரென அதே பாதையில் வந்த சரக்கு லாரி ஒன்று பேருந்து மீது மோதியது. இந்த விபத்தில் 10 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் 4 நாள் மருத்துவனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இந்த விபத்தில் 18 பேர் காயமடைந்தனர்.
விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு ராஜஸ்தான் மாநில முதலமைச்சர் அஷோக் கெலோட் இரங்கல் தெரிவித்துள்ளார்.