வெள்ளி, 15 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: திங்கள், 19 பிப்ரவரி 2024 (10:19 IST)

அரவிந்த் கெஜ்ரிவால் அமலாக்கத்துறை முன்பு ஆஜராக மாட்டார்: ஆம் ஆத்மி அறிவிப்பு

டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் இன்று அமலாக்கத்துறை முன்பு ஆஜராக மாட்டார் என ஆம் ஆத்மி கட்சி அறிவித்துள்ளது.
 
அமலாக்கத்துறை அனுப்பும் சம்மன்கள் சட்டவிரோதமானவை. அதனை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. திரும்பத் திரும்ப சம்மன் அனுப்புவதை விட்டுவிட்டு, நீதிமன்றத்தின் முடிவுக்காக அமலாக்கத்துறை காத்திருக்க வேண்டும் எனவும் ஆம் ஆத்மி கட்சி விளக்கம் அளித்துள்ளது.
 
மதுபான வழக்கில் முறைகேடு செய்ததாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மீது குற்றச்சாட்டு கூறப்பட்டுள்ள நிலையில் இது குறித்து விசாரணை செய்ய அரவிந்த் கெஜ்ரிவால் நேரில் ஆஜராக வேண்டும் என்று அமலாக்கத்துறை 6 சம்மன் அனுப்பி இருந்தது. 
 
ஆறுமுறையும் அரவிந்த் கெஜ்ரிவால் அமலாக்கத்துறை முன்பு ஆஜராகாத நிலையில் இன்று மீண்டும் ஆஜராக வேண்டும் என சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. இதற்கு தான் ஆம் ஆத்மி கட்சி அரவிந்த் கெஜ்ரிவால் இன்று அமலாக்கத்துறை முன்பு ஆஜராக மாட்டார் என   அறிவித்துள்ளது.
 
Edited by 
 
Edited by Mahendran