ஞாயிறு, 17 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Modified: திங்கள், 5 செப்டம்பர் 2016 (12:56 IST)

இது புதுசு! பள்ளித் தேர்வு எழுத ஆதார் அட்டை கட்டாயம்

தேர்வு எழுதும் மாணவர்கள் தங்களின் ஆதார் எண்களை தேர்வுக்கான படிவத்தில் குறிப்பிட வேண்டும் என்ற நடைமுறையை பீஹார் மாநில அரசு கொண்டு வந்துள்ளது.
 

 
பீஹாரில் இந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் நடக்கும் பள்ளித் தேர்வுகளில் இந்த நடைமுறையை அமல்படுத்த பீகார் பள்ளி தேர்வுத்துறை கழகம் திட்டமிட்டுள்ளது.
 
பீஹாரில் மாநிலத்தில் பள்ளித் தேர்வுகளில் நடைபெற்ற முறைகேட்டை அடுத்து இந்த முடிவினை அம்மாநில அரசு எடுத்துள்ளது.
 
ஆதார் எண் வைத்திருக்கும் மாணவர்கள் தேர்வுக்கான படிவத்தில் அதைக் குறிப்பிட வேண்டும். ஆதார் எண் இல்லாத மாணவர்கள் அதற்காக விண்ணப்பித்து பெற்று அதன் எண்ணை குறிப்பிட வேண்டும் என பள்ளி தேர்வு கழகத் தலைவர் ஆனந்த் கிஷோர் தெரிவித்துள்ளார்.