இலவசமாக சாப்பாடு கிடைக்குமென்பதால் கொலை செய்துவிட்டு ஜெயிலுக்கு போன வாலிபர்
வறுமையில் வாடியதால், சாப்பாட்டிற்கு கஷ்டப்பட்டு வந்த இளைஞர், ஜெயிலுக்கு போனால் இலவச சாப்பாடு கிடைக்கும் என்பதால், அப்பாவி சிறுவனை கொலை செய்து விட்டு ஜெயிலுக்கு போன சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பீகாரைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் 9 வயது சிறுவனை கொலை செய்தான். இதனால் பீகார் போலீஸார் அவனை கைது செய்து விசாரித்து வந்தனர். அவனை விசாரித்ததில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. தந்தையை இழந்த அந்த இளைஞர் வறுமையில் வாடி வந்துள்ளார். சாப்பாட்டிற்கே மிகவும் கஷ்டப்பட்டுள்ளார். வயிற்றுப் பிழைப்பிற்காக கடினமான வேலைகளை செய்து வந்துள்ளார்.
இந்நிலையில் தப்பு செய்துவிட்டு ஜெயிலுக்கு போனால் தங்க இடமும், உண்ண உணவும் இலவசமாக கிடைக்கும் என்று கருதிய இளைஞர், வயலில் விளையாடிக் கொண்டிருந்த 9 வயது சிறுவனை மனசாட்சியில்லாமல் கொன்றுள்ளான். இவ்வாறு அவன் போலீஸாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளான். இச்சம்பவம் பீகார் மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.