புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : புதன், 21 மார்ச் 2018 (12:39 IST)

தோழி மீது ஆசிட் வீசிய இளம்பெண் கைது

உத்திரபிரதேச மாநிலத்தில் இளம்பெண் ஒருவர் அவரது தோழியுடனான நட்பை முறித்ததால் ஆத்திரமடைந்த அவர் கூலிப்படையைப் ஏவி தனது தோழியின் முகத்தில் ஆசிட் வீசிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்திரபிரதேச மாநிலம் காசியாபாத்தில் சப்னா என்ற இளம் பெண் ஒருவர் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். அவருடன் அதே பகுதியை சேர்ந்த  தீபா என்ற பெண் வேலை பார்த்து வந்தார். இருவரும் நட்போடு பழகி வந்தனர். ஒரு கட்டத்தில் சப்னா, தீபா உடனான நட்பை முறித்துக்கொண்டார். இதனால் ஆத்திரமடைந்த தீபா சப்னாவை பழிவாங்க திட்டமிட்டுள்ளார்.
 
இந்நிலையில் சப்னா ஆட்டோவில் சென்றுகொண்டிருந்த போது இரு சக்கர வாகனத்தில் வந்த 2 மர்ம நபர்கள், அவர்மீது ஆசிட் வீசியுள்ளனர். 25 சதவீத தீக்காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் சப்னாவிற்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து வழக்கு பதிந்துள்ள போலீஸார் தீபாவையும் மர்ம நபர்களையும் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.