வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : ஞாயிறு, 25 பிப்ரவரி 2018 (15:48 IST)

பாஜக விற்கு ஓட்டு போட்டதால் இளம்பெண் அடித்துக் கொலை

வடமாநிலங்களில் நடைபெற்ற தேர்தலில் இளம்பெண்,  பாஜகவிற்கு ஓட்டு போட்டதால் ஆத்திரமடைந்த அவரது உறவினர்கள் அப்பெண்ணை அடித்துக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திரிபுராவில் சமீபத்தில் சட்டசபை தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் இளம்பெண் ஒருவர் ஆளுங்கட்சியான  மார்க்.கம்யூனிஸ்டிற்கு ஓட்டு போடாமல் பாஜக விற்கு ஓட்டு போட்டுள்ளார்.
 
இதனையறிந்த அந்த பெண்ணின் மாமியார், அவரை இழுத்துச் சென்று கண்மூடித்தனமாக தாக்கியுள்ளார். படுகாயமடைந்த பெண் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக் உயிரிழந்தார். விஷயமறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீஸார், பெண்ணின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்துள்ள போலீஸார், தலைமறைவாக இருக்கும் அந்த பெண்ணின் மாமியாரை தீவிரமாக தேடி வருகின்றன்ர், இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.