வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : சனி, 7 செப்டம்பர் 2019 (13:58 IST)

ஜனாதிபதியாக டிப்ஸ் கேட்ட மாணவனுக்கு மோடி கூறிய அசரவைக்கும் பதில்

இஸ்ரோ கட்டுப்பாட்டு மையத்தில் இருந்த பள்ளி மாணவன் ஜனாதிபதியாவதற்கு மோடியிடம் டிபஸ் கேட்டுள்ளான்.

சந்திரயான் 2 வின் விக்ரம் லேண்டர் நிலவில் தரையிறங்கும் நிகழ்வை காண பெங்களூர் இஸ்ரோ கட்டுப்பாட்டு மையத்துக்கு வந்த பிரதமர் மோடி, அங்கிருந்த பள்ளி மாணவர்களை சந்தித்தார்.

அப்போது ஒரு மாணவன் “நான் ஜனாதிபதி ஆவதற்கு ஆசை படுகிறேன். ஆதலால் எனக்கு எனக்கு டிப்ஸ் கொடுங்கள் என கேட்டுள்ளார். இதற்கு மோடி அந்த மாணவனை பலே என பாராட்டி ”ஏன் நீ பிரதமர் ஆகக்கூடாது?” என திரும்ப கேட்டுள்ளார். அதற்கு அந்த மாணவன் ”இந்தியாவின் ஜனாதிபதி ஆவதே என்னுடைய இலக்கு” என கூறியுள்ளான். அதற்கு மோடி புன்னகைத்தார்.

பின்பு அந்த மாணவனுக்கு பதிலளித்த மோடி, ”வாழ்வில் மிகப்பெரிய குறிக்கோளை கொள்ளுங்கள். அதனை சிறுது சிறுதாக பிரித்து கொள்ளுங்கள். ஏமாற்றத்தை ஒரு போதும் அனுமதிக்க வேண்டாம் என அறிவுரை கூறினார். இதனை அங்குள்ள மாணவர்கள் அனைவரும் அமைதியாக கேட்டனர்.

source ANI