வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: வெள்ளி, 16 டிசம்பர் 2022 (13:44 IST)

காசு கேட்டு கக்கூஸில் கலவரம்; ஒருவர் அடித்துக் கொலை! – மும்பையில் அதிர்ச்சி!

மும்பையில் உள்ள பேருந்து நிலையம் ஒன்றில் பொதுக்கழிப்பறையை பயன்படுத்துவதில் எழுந்த சண்டையில் ஒருவர் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மும்பையில் உள்ள தாதர் பேருந்து நிலையத்தில் உள்ள பொது கழிப்பறையை விஷ்வஜித் என்பவர் பராமரித்து வந்துள்ளார். அந்த கழிவறையை நேற்று இரவு ராகுல் பவார் என்ற நபர் பயன்படுத்திவிட்டு சென்றுள்ளார். ராகுலை தடுத்து நிறுத்தி கழிவறையை பயன்படுத்தியதற்கு பணம் கேட்டுள்ளார் விஷ்வஜித்.

ஆனால் அந்த கழிவறை பொதுக்கழிவறைதான் என கூறி பணம் தர ராகுல் பவார் மறுத்துள்ளார். இதனால் இருவருக்குமிடையே வாக்குவாதம் வளர்ந்தது. வாக்குவாதத்தால் ஆத்திரமடைந்த ராகுல் பவார் தான் வைத்திருந்த கத்தியை வைத்து விஷ்வஜித்தை தாக்க முயன்றுள்ளார். அதற்கு விஷ்வஜித் ஒரு மரக்கட்டையால் ராகுலை தாக்கியதில் ராகுல் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீஸார் விஷ்வஜித்தை கைது செய்துள்ளனர். கழிப்பறையால் நடந்த இந்த கொலை சம்பவம் பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

Edit By Prasanth.K