10 கிமீ ஓட்டப்பந்தயம் - காவலர் உடற்தகுதி தேர்வில் உயிரிழந்த வாலிபர்
ஜார்கண்டில் காவலர் உடற்தகுதி தேர்வில் வாலிபர் ஒருவர் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஜார்கண்டை சேர்ந்த ராஜேஷ் குமார் ஷா(26) என்ற வாலிபர் டெல்லியில் உள்ள நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். அந்த வாலிபருக்கு போலீஸ் ஆகவேண்டும் என்பதே ஆசை.
இதனால் ஜார்க்கண்டின் ஜாம்ஷெட்பூரில் சித்கோரா பகுதியில் ஜே.ஏ.பி. மைதானத்தில் நடைபெற்றுக் கொண்டிருந்த காவலர் பணிக்கான உடற்தகுதி தேர்வில் ராஜேஷ் கலந்து கொண்டார்.
உடற்தகுதி தேர்விற்கு வந்தவர்கள் ஒரு மணி நேரத்திற்குள் 10 கிமீ ஓடும் படி கூறப்பட்டுள்ளது. ஜாரேஷும் அவருடன் வந்தவர்களும் மைதானத்தில் ஓடிக்கொண்டிருந்தனர். அப்போது ராஜேஷ் உள்ளிட்ட 5 பேர் மைதானத்தில் மயங்கி விழுந்தனர்.
இதனால் அவர்கள் அனைவரும் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். ராஜேஷை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
காவலர் ஆக வேண்டும் என்ற குறிக்கோலுடன் இருந்த ராஜேஷ் உயிரிழந்த சம்பவம் அவரது குடும்பத்தினரை பேரதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.