ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Updated : புதன், 22 ஜூன் 2022 (17:14 IST)

சரயு நதியில் ஜாலி செய்த தம்பதி; அடித்து வெளுத்த மக்கள்! – அயோத்தியில் பரபரப்பு!

Ayodhya
அயோத்தியில் உள்ள சரயு நதியில் குளித்த தம்பதியர் இருவர் செய்கையை கண்டித்து அப்பகுதி மக்கள் தம்பதியரை தாக்கியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்து கடவுளான ராமர் பிறந்த பகுதியாக கருதப்படுவது அயோத்தி. இங்கு பல்வேறு கோவில்கள் உள்ள நிலையில் இங்குள்ள சரயு நதி புனித தீர்த்தமாக கருதப்படுகிறது. பல்வேறு பகுதிகளிலிருந்தும் அயோத்தி கோவில்களுக்கு வருபவர்கள் சரயு நதியில் நீராடி செல்வதை வழக்கமாக கொண்டுள்ளனர்.

அவ்வாறாக சரயு நதியில் நீராட தம்பதியர் ஒருவர் வந்துள்ளனர். அவர்கள் நீண்ட நேரமாக தண்ணீரில் இருப்பதை கண்ட சக நீராடியவர்கள் அவர்கள் ஒருவருக்கொருவர் முத்தமிட்டு கொள்வதையும், தண்ணீரில் தவறாக நடந்து கொள்வதையும் கவனித்ததாக தெரிகிறது. புனித நதியில் இருவரும் தவறாக நடந்து கொண்டதாக ஆத்திரமடைந்த அவர்கள் அந்த ஆண் நபரை மூர்க்கமாக தாக்க தொடங்கினர். இதனால் இருவரும் தண்ணீரில் இருந்து எழுந்து சென்றுள்ளனர்.

இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருவதுடன், பல்வேறு தரப்பினரும் இரு தரப்பு மீதும் கண்டனங்களை வைத்து வருகின்றனர்.