1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: புதன், 1 ஜூன் 2022 (10:53 IST)

இயற்கைக்கு மாறான மரணம்: பாடகர் கேகே மரணம் குறித்து வழக்குப்பதிவு!

singer kk
பிரபல பாடகர் கேகே என்பவர் திடீரென மாரடைப்பு காரணமாக மரணம் அடைந்தது இசைஉலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது 
 
பிரதமர் மோடி உள்பட பல அரசியல் தலைவர்களும் யுவன்சங்கர் ராஜா உள்பட பல இசையமைப்பாளர்கள் பாடகர் கேகே மறைவிற்கு இரங்கல் தெரிவித்துள்ளனர் 
 
இந்தநிலையில் கொல்கத்தாவில் பாடகர் கே.கே. மரணம் குறித்து, இயற்கைக்கு மாறான மரணம் என போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
 
முதல்கட்ட விசாரணையில் இசை நிகழ்ச்சியின் போது நெஞ்சு வலிப்பதாக கே.கே. கூறியதை அடுத்து, மருத்துவமனைக்கு செல்லும் போதே அவர் உயிரிழந்துள்ளார் என காவல்துறை தெரிவித்துள்ளது