வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: வியாழன், 7 மார்ச் 2019 (10:33 IST)

என்னா அடிங்குற!! செருப்பால் அடிவாங்கிய பாஜக எம்.எல்.ஏ; வைரல் வீடியோ!!

பேனர் பிரச்சனையில் பாஜக எம்.பி எம்.எல்.ஏவை செருப்பால் தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
தேர்தல் நெருங்கும் நேரத்தில் எல்லா கட்சிகளிலும் பரபரப்பும், சண்டைகளும் தொற்றிக்கொண்டுள்ளது. பேச தெரியாமல் பேசி பாஜக அமைச்சர்கள் சர்ச்சையில் சிக்கி வருகின்றனர். ஓட்டு போட்டால் காசு தருகிறேன் என மராட்டிய பாஜக தலைவர் கூறியது சர்ச்சையை கிளப்பியது.
 
இந்நிலையில் உத்திரபிரதேசம் சந்த் கபிர் நகர் பகுதியில் பாஜக கூட்டம் நடைபெற்றது. இதில், பாஜக எம்பி சரத் திரிபாதி,  பாஜக எம்.எல்.ஏ ராகேஷ் சிங் உள்ளிட்ட பல கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
 
அப்போது பேனரில் பெயர் சேர்க்கப்படாதது குறித்தான பேச்சுவார்த்தை நடந்த போது, பிரச்சனை வெடித்தது. திடீரென சரத் திரிபாதி காலில் இருந்த செருப்பை கழட்டி எம்.எல்.ஏ ராகேஷ் சிங்கை சரமாரியாக அடிக்க துவங்கினார். இதனால் அந்த இடமே கலவரமயமானது. 
 
உடனடியாக அருகிலிருந்த போலீஸார் அவர்களுக்கிடையே நடந்த சண்டையை தடுத்து ஒரு கோஷ்டியை வெளியே அனுப்பினர். இச்சம்பவம் பாஜக வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.