வெள்ளி, 29 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: வியாழன், 27 டிசம்பர் 2018 (13:53 IST)

80 வயதில் அப்பாவான தாத்தா; 65 வயதில் அம்மாவாகிய பாட்டி: எங்கே தெரியுமா?

ஜம்மு காஷ்மீரில் 65 வயது பாட்டி ஒருவர் அழகிய பெண் குழந்தையை பெற்றெடுத்திருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தை சேர்ந்தவர் ஹக்கிம் டின். 80 வயதாகும் இவருக்கு 65 வயதில் ஒரு மனைவி இருக்கிறார். இவர்களுக்கு ஒரு மகன் இருந்த நிலையில் ஹக்கிம்மின் மனைவி கர்ப்பமுற்றார். இது மருத்துவ உலகில் அதிசயமாக பார்க்கப்படுகிறது ஏனென்றால், ஒரு பெண்ணிற்கு 45 முதல் 50 வயதில் மாதவிடாய் நின்றுவிடும். அதன்பிறகு அவர்களால் குழந்தை பெற்றெடுக்க முடியாது. 
ஆனால் இந்த விஷயத்தில் 65 வயதாகியும் இவர் கர்ப்பமுற்றிருக்கிறார். அந்த மூதாட்டி சுகப்பிரசவம் மூலம் ஒரு அழகிய பெண் குழந்தையையும் பெற்றெடுத்துள்ளார். இது மருத்துவ உலகில் நடைபெற்றிருக்கும் அதிசயம் என மருத்துவர்கள் கூறியிருக்கின்றனர்.