கூட்டு பலாத்காரம் செய்து கொடூரமாக கொலை செய்யப்பட்ட 13 வயது சிறுமி
ஹரியானா மாநிலத்தில் கடந்த வாரம் காணாமல் சிறுமியை போலீஸார் தேடி வந்த நிலையில் அவரை கூட்டு பலாத்காரம் செய்து கொன்று வீசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஹரியானா மாநிலம் குருஷேத்திரத்தில் ஜன்சா என்ற கிராமத்தில் தையல் தொழிலாளி ஒருவர் வசித்து வந்தார். அவரது மகள் அருகிலுள்ள பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார். அவரது மகள் 3 நாட்களுக்கு முன்பு காணாமல் போனார். இது தொடர்பாக சிறுமியின் தந்தை காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்த நிலையில் ஊருக்கு அருகே உள்ள கால்வாயில் சிறுமி பிணமாக மிதந்தார்.
சிறுமியின் உடல் முழுவதும் காயங்கள் ஏற்பட்டிருந்தன. பிரேத பரிசோதனையில் சிறுமி ஒரு கும்பலால் கொடூரமாக கற்பழிக்கப்பட்டு முகம், கழுத்து, உதடு, மார்பு பகுதி என உடலில் 19 இடங்களில் காயம் இருந்ததும் தெரியவந்துள்ளது. அவரது உடலுக்குள் இரும்பு கம்பி செலுத்தப்பட்ட நிலையில், நுரையீரல் பகுதி முற்றிலும் சிதைந்து இருந்தது. போலீசார் இந்த கொடூர செயலை செய்த காம மிருகங்களை தேடி வருகிறார்கள்.