1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Arun Prasath
Last Modified: வெள்ளி, 20 டிசம்பர் 2019 (11:59 IST)

காஷ்மீர் பணியில் சிக்கி தவிக்கும் 900 தமிழக லாரி டிரைவர்கள்

தமிழகத்தை சேர்ந்த 900 லாரி டிரைவர்கள், காஷ்மீரில் பனியில் சிக்கி சாப்பாடின்றி தவித்து வருகின்றனர்.

காஷ்மீரில் விளையும் ஆப்பிள்களை ஏற்றி வருவதற்கு தமிழகத்தின் நாமக்கல் பகுதியிலிருந்து ஏராளமான சரக்கு லாரி கடந்த 7 ஆம் தேதி சென்றுள்ளன.

இந்நிலையில் தற்போது அங்கே பனிப்பொழிவு அதிகமாக உள்ளதால் வாகனங்கள் சாலைகளில் பயணிப்பதில் கரும் சிரமம் ஏற்பட்டு வருகிறது.
இதனால் ஆப்பிள் லோடுடன் தமிழகத்திற்கு புறப்பட்ட 450 லாரிகள் பனிப்பொழிவில் சிக்கிக்கொண்டுள்ளன. பனியில் சிக்கிக்கொண்டதால் லாரி டிரைவர்கள் கிளீனர்கள் உட்பட 900 க்கும் மேற்பட்டவர்கள் சாப்பாட்டுக்கு திண்டாடி வருவதாக செய்திகள் தெரிவிக்கின்றன.