ரயில் தடம்புரண்ட விபத்தில் 9 பேர் பலி
ராஜஸ்தான் மாநிலத்தின் பிகானீர் பகுதியிலிருந்து அசாம் மாநிலம் கவுகாத்தியில் இருந்து பிகானீர் விரைவு ரயில் சென்று கொண்டிருந்த ரயில் ஒன்று தடம்புரண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
டோகோமொனி என்ற பகுதியில் இந்த ரயில் தடம் புரண்டதில் அதிலுள்ள 12 பெட்டிகள் தடம்புரண்டு விபத்து ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகிறது.
இந்த விபத்தில் சுமார் 30 க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளதாகவும், 9 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு தலா ரூ.5 லட்சம் மற்றும் காயமடைந்தவர்களுக்கு ரூ1 லட்சம் இழப்பீடாக வழங்கப்படும் என ரயில்வேதுறை தெரிவித்துள்ளது. தற்போது படுகாயம் அடைந்தவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.