வியாழன், 14 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: வியாழன், 12 மார்ச் 2020 (15:47 IST)

கேரளாவில் உச்சம்: இந்தியாவில் ஆட்டம் காட்டும் கொரோனா!!

இந்தியாவில் 73 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். 
 
உலகம் முழுவதும் மிக வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் கொஞ்சம் கொஞ்சமாக பரவி வருகிறது. சீனாவில் தொடங்கி கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் அச்சுறுத்தி வருகிறது. இதுவரையில் உலகம் முழுவதும் கொரோனா வைரஸால் 1,25,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
 
இந்தியாவில் 73 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். அதில் ஒருவர் நேற்று மரணமடைந்தார் என்பதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 
 
அதிகபட்சமாக கேரளாவில் 17 பேரும், உத்தரப் பிரதேசத்தில் 10 பேரும், மகாராஷ்டிராவில் 11 பேரும், டெல்லியில் 6 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
 
தற்போது கொரோனா பெருந்தொற்று நோயாக அறிவிக்கப்பட்டுள்ளதால் கொரோனா பாதிக்கப்பட்ட நாடுகள் எமெர்ஜென்சி நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என உலக சுகாதார அமைப்பு வலியுறுத்தியுள்ளது.