குடிபோதையில் வாகனம் ஓட்டி விபத்தில் உயிரிழப்பு ஏற்படுத்தினால் 7 ஆண்டுகள் சிறை தண்டனை
குடிபோதையில் வாகனம் ஓட்டி விபத்தில் உயிரிழப்பு ஏற்படுத்தினால் 7 ஆண்டு விதிக்க தண்டனை விதிக்க மத்திய அரசு புதிய சட்டம் உருவாக்கியுள்ளது.
குடிபோதையில் வாகனங்களை இயக்குவதால் ஏற்படும் விபத்துக்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே இருக்கிறது. தற்பொழுது இருக்கும் சட்டத்தில் குடித்துவிட்டு வாகனம் ஓட்டி உயிரிழப்பு ஏற்படுத்தினால் 2 ஆண்டு சிறை தண்டனை அல்லது அபராத தொகை அல்லது இரண்டும் சேர்த்து விதிக்கப்படுகிறது. இதை தொடர்ந்து தற்பொழுது மத்திய அரசு, மோட்டார் வாகன சட்டத்தை மாற்றி அமைத்து அதில் திருத்தம் செய்து கடுமையான நடவடிக்கை மேற்கொள்ள முடிவு செய்துள்ளது. அதன்படி குடிபோதையில் வாகனம் ஓட்டி விபத்து ஏற்படுத்தி உயிரிழப்பு நேரிட்டால் 7 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்படும். இதுபோல் கடுமையான சட்டங்களை கொண்டு வருவதன் மூலம் குடிபோதையால் ஏற்படும் விபத்துகள் குறைய வாய்ப்புள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.