1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : திங்கள், 4 மார்ச் 2019 (19:22 IST)

7 - தொகுதிகள் கேட்கும் தேமுதிக : சிக்கலில் அதிமுக

தேமுதிக தலைவர் விஜயகாந்தை சந்திக்க இன்று  அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஒ.பன்னீர் செல்வம் வந்தார். நாளை கூட்டணி குறித்து முக்கிய ஆலோசனை எடுக்கப்படுவதாக தேமுதிக நேற்று அறிவித்திருந்த நிலையில் இன்று மாலை தற்போது ஓ.பன்னீர்செல்வம் நேரடியாக விஜயகாந்த் வீட்டுக்குச் சென்று சந்தித்தார். 

இந்த சந்திப்பின் போது கூட்டணி குறித்தும் , விஜயகாந்தின் உடல்நிலை குறுத்தும் விசாரித்து அறிந்ததாகவும், வரும் நாளைமறுநாள் நடக்கவுள்ள  மெகா கூட்டணியின் தேர்தல் பரப்புரை கூட்டத்தில் தேமுதிகவும் கலந்துகொள்ள வேண்டும் என்பதற்காகத்தாக் தற்போது தேமுதிக தலைவர் விஜயகாந்தை சந்தித்ததாகக் கூறினார் ஓ. பன்னீர் செல்வம்.
இந்நிலையில் இந்தப் பேச்சு வார்த்தை சுமார் 1 மணி நேரம் நடைபெற்றதாகவும், இதில் தேமுதிக பாமகவுக்கு இணையாக  7 - தொகுதிகள் வேண்டுமென்பதில் உறுதியாக இருப்பதாகவும் தெரிகிறது. 
 
ஆனால் தேமுதிகவுக்கு 7 தொகுதிகள் கொடுத்தால், ஏற்கனவே பாமக :7 , பாஜக :5, புதிய தமிழகம் ; 1, போன்ற கட்சிகளுக்கு ஒதிக்கிய தொகுதிகள் போக அதிமுக . 19 தொகுதிகளில் மட்டுமே போட்டியிட முடியும் என்பதால் தற்போது அக்கட்சி பலமாக யோசித்து வருவதாக தெரிகிறது.
தேமுதிக 7- தொகுதிகள் என்பதில் உறுதியாக உள்ளதால் நாளைக்குள் அதிமுகவின்  இந்த மெகா கூட்டணியில் சுமூக உடன்பாடு எட்டப்படுமா என்பது குறித்து பலரும் கேள்வி எழுப்பி வருகிறார்கள். 
 
இந்த சந்திப்பின் போது துணைமுதல்வர் ஓ.பன்னீர் செல்வத்துடன் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயகுமாரும் உடன் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
 
இந்த சந்திப்பின் போது , தேமுதிகவில் பிரேமலதா விஜயகாந்த், சுதீஸ் ஆகியோர் உடனிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.