பாதுகாப்பை மீறி வெடிக்கும் வன்முறைகள்: கேள்விக்குறியாகும் தமிழர்களின் நிலை


Last Updated: திங்கள், 12 செப்டம்பர் 2016 (20:31 IST)
காவிரியில் தண்ணீர் திறந்துவிடும் உச்ச நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக கர்நாடகாவில் தற்போது வன்முறை உச்சத்தை எட்டியுள்ளது.

 


காவிரியில் தண்ணீர் திறந்துவிடக் கோரி, தமிழக அரசு காவிரி மேற்பார்வைக் குழுவை அணுகுமாறு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அதேநேரத்தில் இடைக்கால உத்தரவாக, கடந்த 5ம் தேதி முதல் 10 நாட்களுக்கு தினசரி 15 ஆயிரம் கன அடி வீதம் தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிட கர்நாடக அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
 
நீதிமன்ற உத்தரவை ஏற்று கர்நாடக அரசும் தண்ணீரை திறந்துவிட்டது. அதேநேரம், காவிரி நீரை திறந்துவிட பிறப்பித்த உத்தரவில் திருத்தம் செய்யக் கோரி கர்நாடக அரசு சார்பில், உச்ச  நீதிமன்றத்தில் மறு சீராய்வு மனுவும் தாக்கல் செய்ய்ப்பட்டது.
 
அந்த மனு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. அப்போது, அந்த மனுவை தள்ளுபடி செய்த உச்சநீதிமன்றம், வருகிற 20ம் தேதி வரை வினாடிக்கு 12 ஆயிரம் கன அடி நீரை தமிழகத்திற்கு, கர்நாடக அரசு திறந்துவிட வேண்டும் என உத்தரவிட்டது.

உச்சநீதிமன்ற உத்தரவை தொடர்ந்து கர்நாடகாவில் பெரும் வன்முறை  நிகழ்ந்துவருகிறது. இதையடுத்து பெங்களூருவில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. போலீஸாரும் பாதுகாப்பிற்காக குவிக்கப்பட்டனர்.

இந்தநிலையில் மைசூர் சாலையில் தமிழகத்தை சேர்ந்த கே.பி.என், எஸ்.ஆர்.எஸ் டிராவல்ஸ் நிறுவனத்தைச் சேர்ந்த 65க்கும் மேற்பட்ட பேருந்துகள் கன்னட அமைப்பினர் சிலரால் தீ வைத்து எரிக்கப்பட்டது.

போலீஸாரின் இந்த பாதுகாப்பையும் மீறி இந்த சம்பவம் நடைபெற்ற நிலையில், அங்குள்ள தமிழர்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளது.


இதில் மேலும் படிக்கவும் :