புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By bala
Last Modified: சனி, 10 டிசம்பர் 2016 (12:52 IST)

44 போலி கணக்குகளில் 450 கோடி ரூபாய் கருப்பு பணத்தை மாற்றிய ஆக்சிஸ் வங்கி

கறுப்பு பணம் ஒழிப்பு நடவடிக்கையின் ஒரு கட்டமாக 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என பிரதமர் அறிவித்தது நாம் அறிந்ததே. இதையாடுத்து பொதுமக்கள் தங்களிடமுள்ள பழைய ரூபாய் நோட்டுகளை வங்கிகளில் மாற்றி வருகின்றனர்.


 

பழைய ரூபாய் நோட்டுகளை மாற்ற இந்த மாதம் 31ம் தேதி கடைசி என்பதால் பொதுமக்கள் தற்போது அதிக அளவில் வங்கிகளில் குவிகின்றனர். இதில் பலர் தங்களிடமுள்ள கருப்பு பணத்தை வங்கிகளில் செலுத்தினால் மாட்டிகொள்வோமோ என்று எண்ணி புரோக்கர்களின் உதவியை நாடுவதாக தகவல்கள் பரவின. இதையடுத்து வங்கிகளில் கடுமையான சோதனையை வருமானவரி துறையினர் மேற்கொண்டனர்.

இந்த நிலையில் டெல்லி காஷ்மேரே கேட் பகுதியில் உள்ள ஆக்சிஸ் வங்கி கிளையை சேர்ந்த இரு மேனேஜர்கள் கருப்புப் பணத்தை மாற்ற உதவி செய்துவருவதாக தகவல்கள் வருமானவரி துறையினருக்கு கிடைத்தது. இதையடுத்து அந்த வங்கியை சோதனை செய்து அவர்கள் இருவரையும் கைதுசெய்து விசாரித்து வருகின்றனர்.

மேலும் டெல்லி சாந்தினி சவுக் பகுதியில் உள்ள ஆக்சிஸ் வங்கி கிளையில் வருமான வரித்துறை அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தியதில், கடந்த ஒருமாத காலத்தில் இங்குள்ள 44 போலி கணக்குகள் மூலம் சுமார் 450 கோடி ரூபாய் அளவுக்கு 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் மாற்றப்பட்ட விபரம் தெரியவந்துள்ளது. மேலும் அந்த கணக்குகளில் உள்ள 100 கோடி ரூபாயை முடக்கம் செய்தான்ர்.

இதையடுத்து போலி வங்கி கணக்குகள் குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.