வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: வியாழன், 5 டிசம்பர் 2019 (22:52 IST)

ஆழ்துளையில் விழுந்த சிறுவனை அதிரடியாக மீட்ட மீட்புக்குழுவினர்!

ராஜஸ்தான் மாநிலத்தில் தனது வீட்டின் அருகில் விளையாடிக் கொண்டிருந்த 4 வயது சிறுவன் திடீரென மூடப்படாமல் இருந்த ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த நிலையில் அந்த சிறுவனை மீட்புப்படையினர் அதிரடியாக மீட்டனர்.
 
சிறுவன் ஆழ்துளை கிணற்றில் விழுந்ததை அறிந்து உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த மீட்புகுழுவினர் ஆழ்துளை கிணற்றில் விழுந்த சிறுவன் 15 அடி ஆழத்தில் இருந்ததை முதலில் உறுதி செய்தனர்.
 
பின்னர் சிறுவனுக்கு சுவாசிக்க தேவையான ஆக்சிஜன் குழாய் மூலம் வழங்கிய மீட்புப்படையினர் அதிரடியாக 8 மணி நேர போராடி ஆழ்துளை கிணற்றில் விழுந்த சிறுவனை பத்திரமாக மீட்டனர். மீட்கப்பட்ட சிறுவன் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு அவனுக்கு உரிய சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும், சிறுவனின் உயிருக்கு எந்தவித ஆபத்தும் இல்லை என்றும் மீட்புப்படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.