செவ்வாய், 8 அக்டோபர் 2024
  1. செய்திகள்
  2. »
  3. செய்திகள்
  4. »
  5. தேசியச் செய்திகள்
Written By Geetha priya
Last Modified: புதன், 9 ஏப்ரல் 2014 (13:07 IST)

ஒரே கிராமத்தில் வசிக்கும், ஒரே குடும்பத்தை சேர்ந்த 301 பேர் வாக்களித்தனர்

அஸ்ஸாம் மாநிலத்தில் முதல் கட்டமாக நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவில் ஒரே கிராமத்தில் வசிக்கும் ஒரே குடும்பத்தை சேர்ந்த 301 பேர் அவர்களது வாக்குகளை பதிவு செய்தனர்.
 
நாடாளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்றுக்கொண்டிருக்கும் நிலையில்,  முதல் கட்டமாக அஸ்ஸாமில் 5  தொகுதிகளில் வாக்குப்பதிவு நடந்து முடிந்துள்ளது. இந்நிலையில், அஸ்ஸாம் மாநிலத்தில் உள்ள தேஸ்பூர் தொகுதியில் பல்குரி  நேபாளிபம் கிராமத்தையும்,  ஒரே குடும்பத்தையும் சேர்ந்த 301 வாக்காளர்கள் வாக்களித்தனர்.
 
இவர்களில் 175 பேர் ஆண்கள் மற்றும் 126 பேர் பெண்கள். இதே குடும்பத்தை சேர்ந்த மேலும் 20 பேர் ஊரில் இல்லாததால் அவர்களால் வாக்களிக்க இயலவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
1888 ஆம் ஆண்டு நேபாளத்திலிருந்து குடிபெயர்ந்த அஹிமன் தாபா என்பவரின் வாரிசுகள் தலைமுறை தலைமுறையாக ஒரே கிராமத்தில் வசித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.