வியாழன், 28 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : ஞாயிறு, 1 செப்டம்பர் 2019 (09:04 IST)

பாகிஸ்தான் கொடியை பயன்படுத்தியதாக 30 மாணவர்கள் கைது! பெரும் பரபரப்பு

கல்லூரி மாணவர் தேர்தலின்போது பாகிஸ்தான் கொடியை காட்டி வாக்கு கேட்டதாக 30 மாணவர்கள் கைது செய்யப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
கேரள மாநிலத்தில் உள்ள கோழிக்கோடு என்ற பகுதியில் உள்ள ஒரு கல்லூரியில், கல்லூரி மாணவர் தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் மாணவர்களிடையே வாக்கு கேட்ட 'முஸ்லிம் மாணவர்கள் முன்னணி' என்ற அமைப்பு பாகிஸ்தான் கொடியை பயன்படுத்தியதாக சமூக வலைதளங்களில் செய்திகள் வெளியானது. இதுகுறித்த வீடியோக்களும் வைரல் ஆனதால் உடனடியாக கோழிக்கோடு காவல்துறையினர் இது குறித்து விசாரணை செய்து, 30 மாணவர்களை அதிரடியாக கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர் 
 
ஆனால் விசாரணையின் போது மாணவர்கள் கூறியபோது, 'நாங்கள் பாகிஸ்தான் கொடியை பயன்படுத்தவில்லை. முஸ்லிம் மாணவர் அமைப்பின் கொடியை தான் நாங்கள் பயன்படுத்தினோம். ஆனால் கொடி செய்தவர்கள் செய்த தவறு காரணமாக அது பாகிஸ்தான் கொடி போல் மாறிவிட்டது. இது எங்களுக்கே தெரியாமல் நடந்த தவறு என்றும் பாகிஸ்தானுக்கு ஆதரவாக நாங்கள் செயல்படுவதாக கூறப்படுவது தவறு என்று மாணவர்கள் விளக்கமளித்தனர் 
 
இருப்பினும் இது குறித்து கோழிக்கோடு காவல்துறையினர் மேலும் விசாரணை செய்து வருகின்றனர். மாணவர் பருவத்திலேயே இந்தியாவுக்கு எதிராகவும், பாகிஸ்தானுக்கு ஆதரவாகவும் முஸ்லிம் இளைஞர்கள் ஈடுபடுவது கண்டிக்கத்தக்கது என கேரளாவிலுள்ள பாஜகவை சேர்ந்த தலைவர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்