புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: திங்கள், 17 டிசம்பர் 2018 (15:19 IST)

3வயது பெண் குழந்தையை பாலியல் பலாத்காரம் செய்த கொடூரன் : பொதுமக்கள் தர்ம அடி!

டெல்லியில் மூன்று வயது பெண்குழந்தையை பாலியல் பலாத்காரம் செய்த கொடூரனை அங்குள்ள பொது மக்கள் தர்மஅடி கொடுத்து  போலீஸில் ஒப்படைத்தனர்.
டெல்லியில் உள்ள துவாராக பகுதியில் வசித்து வரும் இளம் தம்பதியினருக்கு 3 வயதில் குழந்தை இருந்துள்ளது. அன்றாடம் வேலைக்குச் சென்றால் தான் சாப்பாடு என்பதால் சம்பவத்தன்று பெற்றோர் கூலிவேலைக்குச் சென்றி விட்டனர்.
 
அப்போது குழந்தை வீட்டில் இருப்பதை அறிந்து கொண்ட பக்கத்து வீட்டைச் சேர்ந்த ரஞ்சித் என்பவர்( 40 ) சின்னக் குழந்தையை கொடூரமாக வன்புணர்வு செய்துள்ளான்.
 
குழந்தையின் அழுகுரல் சப்தம் கேட்டதால் அங்குள்ள பொதுமக்கள், அனைவரும் சேர்ந்து ரஞ்சித்துக்கு தர்ம அடி கொடுத்து அவனை  காவல் நிலையத்தில் போலீஸாரிடம்  ஓப்படைத்தனர்.
 
பலத்த காயம் அடைந்த பெண் குழந்தை, தற்போது டெல்லி தீனதயாள் உபாத்யா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக செய்திகள் தெரிவிக்கின்றன.