சிறுமியை தாக்கி பாலியல் பலாத்கரம் செய்த 3 பேர் கைது!
கேரள மாநிலத்தில் சிறுமியை தாக்கி பாலியல் பலாத்கரம் செய்த 3 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
மேற்கு வங்க மாநிலத்தில் இருந்து கேரளாவின் இடுக்கி மாவட்டத்திற்கு வந்த ஒரு குடும்பத்தினர் அங்குள்ள தேயிலை தோட்டத்தில் வேலை செய்து வந்தனர்.
அவர்களுடம் 15 வயதுள்ள ஒரு சிறுமியும் இருந்துள்ளார். அவர், அப்பகுதியைச் சேர்ந்த சில நணபர்களுடன் பாறைப்பகுதிக்குச் சென்றார்.
பூம்பாறை என்ற பகுதியில் ஏற்கனவே நின்றிருந்த சில வாலிபர்கள், சிறுமியின் நண்பர்களைத் தாக்கி சிறுமியை தேயிலை தோட்டத்திற்கு தூக்கிச் சென்றனர்.
அங்கு வைத்து, சிறுமியை பலாத்காரம் செய்துவிட்டு அவர்கள் தப்பி ஓடிவிட்டனர். இதுபற்றி சிறுமியின் பெற்றோர் போலீஸில் புகாரளித்தனர். இதில். சிறுவன் உள்பட 2 பேரை கைது செய்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.