டெல்லியில் ஓடும் காரில் இளம் பெண் பலாத்காரம்
டெல்லி தெற்கு பகுதியில் உள்ள வசந்த விஹார் அருகே 21 வயது இளம் பெண்ணை ஓடும் காரில் பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.
டெல்லி இந்தியாவின் தலைநகரம் அல்ல பாலியல் பலாத்காரத்தின் நகரம். இப்படி தான் பலரும் குறிப்பிட்டு வருகின்றனர். டெல்லியில் ஏற்கனவே ஓடும் பேருந்தில் இளம் பெண் ஒருவர் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டது இந்தியாவில் பெரும் அதிர்ச்சியை கிளப்பியது.
வரிசையாக டெல்லியில் தொடர்ந்து பாலியல் பலாத்காரம் சம்பவம் நடைப்பெற்று தான் கொண்டிருகிறது. மீண்டும் தற்போது ஓடும் காரில் 21வயது இளம் பெண் ஒருவர் 3 பேரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார்.
தெற்கு டெல்லியில் உள்ள வசந்த விஹார் பகுதியில் உள்ள மல்டிபிளக்ஸ் அருகே சாலையோரம் நடந்து போய் கொண்டிருந்த பெண்கள் அருகே சென்ற கார் ஒரு பெண்ணை மட்டும் காரில் இருந்த நபர்களால் உள்ளே இழுத்து கடத்திச் செல்லபட்டது.
அந்த பெண்ணுடைய தொழி ஒருவர் கார் பதிவு எண்ணை காவல் துறையினரிடம் கொடுத்து தகவல் சொல்லியுள்ளார். இதையடுத்து காவல் துறையினர் அந்த 3 பேரையும் கைது செய்தனர்.
காவல் துறையினர் அந்த மூன்று பேரையும் கைது செய்வதற்கு இடையில் கடத்தி செல்லப்பட்ட பெண் தன் தோழியிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு தான் பூர்வி மார்க் பகுதியில் இருப்பதாக தெரிவித்துள்ளார். உடனே மருத்துவர் குழுவுடன் அந்த இடத்துக்கு விரைந்து சென்று அந்த பெண்ணை மீட்டனர். அப்போது மருத்துவ சோதனையில் அந்த பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டது உறிதியானது.
இதையடுத்து கைது செய்யப்பட குற்றவாளிகள் மூன்று பேரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டனர். மேலும் பலாத்காரம் செய்யப்பட்ட பெண் இமாலச்சல் பிரதேசத்தைப் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தகது.