செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Updated : புதன், 12 ஜூலை 2023 (12:20 IST)

அமர்நாத்தில் யாத்திரைக்கு சென்ற தமிழக பக்தர்கள் நிலச்சரிவில் சிக்கித் தவிப்பு!

அமர்நாத் யாத்திரைக்குச் சென்ற தமிழகத்தை சேர்ந்த 21 பக்தர்கள் நிலச்சரிவில் சிக்கி தவித்துக் கொண்டிருப்பதாகவும் அவர்களை மீட்க தமிழ்நாடு அரசு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடப்பட்டுள்ளது.
 
அமர்நாத் பனிலிங்கத்தை தரிசிக்க ஏராளமான பக்தர்கள் சென்று கொண்டிருக்கும் நிலையில் தமிழகத்திலிருந்து அமர்நாத் பனிலிங்கத்தை தரிசித்துவிட்டு திரும்பிய வழியில் ஜம்மு-காஷ்மீர் இடையே ஏற்பட்ட நிலச்சரிவில் 21 தமிழக பக்தர்கள் சிக்கி தவித்துக் கொண்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளன. 
 
தேனி மாவட்டம் உத்தமபாளையம், சின்னமனூர் ஆகிய பகுதிகளை சேர்ந்த இவர்கள் தங்களை காப்பாற்ற தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர். 
 
தற்போது காஷ்மீர் பாதுகாப்பு படையினர் ஏற்பாடு செய்துள்ள தற்காலிக முகாம்களில் அவர்கள் தங்கி இருப்பதாகவும் தங்களை உடனடியாக தமிழகத்திற்கு கொண்டு செல்ல தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
 
Edited by Mahendran