செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By sinoj
Last Updated : செவ்வாய், 16 ஜூன் 2020 (22:39 IST)

20 இந்திய ராணுவ வீரர்கள் வீரமரணம்? இந்திய - சீனா எல்லைப் பகுதியில் பதற்றம் !!

நேற்று இரவு நடந்த திடீரென சீன வீரர்கள் நடத்திய தாக்குதலில் இந்திய ராணுவ அதிகாரி ஒருவரும் 2 ராணுவ வீரர்களும் வீரமரணம் அடைந்தனர். இந்த நிலையில் சீன எல்லையில் நேற்று இரவு நடந்த மோதலில் வீரமரணம் அடைந்த மூவரில் ஒருவர் தமிழகத்தைச் சேர்ந்தவர் என்ற தகவல் இன்று  வெளியான நிலையில்  மத்திய  ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங்குடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார்.

இந்நிலையில்,  சீனா ராணுவம் நடத்திய தாக்குதலில் அரசு வட்டாரங்களைச் சுட்டிக்காட்டி  சினா ராணுவம் நடத்திய தாக்குதலில் ஏற்கனஎவெ மூன்று பேர் உயிரிழந்த நிலையில் மேலும் 17  இந்திய ராணுவ வீரர்கள் வீர மரணம் அடைந்துள்ளதாகவும், பதிலுக்கு இந்திய ராணுவம் நடத்திய தாக்குதலில் சீனா ராணுவத்தின் தரப்பில் சுமார் 43 ராணுவ வீரர்கள் பலியானதாகவும் ஏஎன்ஐ செய்தி நிறுவனம்  அதிகாரப்பூர்வ  தகவல் தெரிவித்துள்ளது.