டெல்லியில் செத்து விழுந்த காக்கைகள் – பறவைக் காய்ச்சல் அச்சம்!
டெல்லியின் சில பகுதிகளில் 20க்கும் மேற்பட்ட காகங்கள் இறந்தது பறவைக் காய்ச்சல் சந்தேகத்தை அதிகமாக்கியுள்ளது.
இந்தியாவின் இன்னும் கொரோனா வைரஸ் தாக்குதல் முழுமையாகக் கட்டுக்குள் வராமல் மக்கள் அவதிப் பட்டு வருகின்றனர். இந்நிலையில் இப்போது ராஜஸ்தான் மாநிலத்தின் சில பகுதிகளில் பறவைகளுக்கு மர்ம வைரஸ் மூலமாக காய்ச்சல் ஏற்பட்டு உயிரிழப்பது அதிகமாகியுள்ளது. அதிலும் குறிப்பாக வட இந்திய மாநிலங்களின் கடும் குளிர் காரணமாக இந்த வைரஸ் பரவுவது அதிகரிப்பதாக சொல்லப்படுகிறது.
இந்நிலையில் இந்தியாவில் இதுவரை 6 மாநிலங்களில் பறவைக் காய்ச்சல் கண்டறியப்பட்டுள்ள நிலையில் இப்போது டெல்லியில் 20 க்கும் மேற்பட்ட காக்கைகள் இறந்தது அங்கும் பறவைக் காய்ச்சல் பரவி உள்ளதோ என்ற சந்தேகத்தை எழுப்பியுள்ளது. இதையடுத்து இறங்க காக்கைகளின் மாதிரிகள் சேகரிக்கபட்டு மத்திய பிரதேசத்தில் உள்ள விலங்குகள் நேஷனல் இன்ஸ்டிட்யூட் ஆஃப் ஹை செக்யூரிட்டி அனிமல் டிசீஸ் மையத்திற்கு ஆய்வுக்காக அனுப்பிவைக்கப்படுகிறது.