பூரண மதுவிலக்கு உள்ள குஜராத்தில் கள்ளச்சாராயம் குடித்து 18 பேர் பலி!
இந்தியாவில் ஒரு சில மாநிலங்களில் மட்டுமே பூரண மதுவிலக்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது என்பதும் ஆனால் அந்த மாநிலங்களிலும் கள்ளச்சாராயம் பெருக்கெடுத்து ஓடுவதால் தகவல்கள் வெளிவந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
அந்த வகையில் பூரண மதுவிலக்கு அமல்படுத்தப்பட உள்ள மாநிலங்களில் ஒன்று குஜராத். இம்மாநிலத்தில் கடந்த சில மாதங்களாக கள்ளச்சாராயம் அதிகரித்து வருவதாக கூறப்பட்ட நிலையில் இன்று கள்ளச்சாராயம் குடித்து 18 பேர் உயிரிழந்ததாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
அதுமட்டுமின்றி கள்ளச்சாராயம் குடித்த 20 பேர் கவலைக்கிடமாக இருப்பதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என்றும் அஞ்சப்படுகிறது.
கள்ளச்சாராயத்தில் ரசாயனம் கலக்கப்பட்டதா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை செய்து வருவதாகவும் விசாரணை முடிவில் பல உண்மைகள் தெரியவரும் என்றும் கூறப்படுகிறது.