1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By siva
Last Updated : புதன், 4 நவம்பர் 2020 (19:54 IST)

பள்ளி திறந்த ஆந்திராவில் இருந்து அதிர்ச்சி தகவல்: தமிழகத்திலும் எதிரொலிக்குமா?

ஆந்திராவில் நவம்பர் 2ம் தேதி பள்ளிகள் திறந்த நிலையில் அம்மாநிலத்தில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு கொரோனா வைரஸ் பரவி இருப்பதால் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது 
 
தமிழகத்தில் நவம்பர் 10ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் ஆந்திராவில் நவம்பர் 2ம் தேதி பள்ளிகள் திறக்கப்பட்டு முதல் கட்டமாக 9 10ம் வகுப்புகளுக்கு மட்டும் மாணவர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டிருந்தது 
 
இந்த நிலையில் தற்போது திடீரென பள்ளிகள் திறந்த மூன்றே நாட்களில் 150 ஆசிரியர்களுக்கும் 10 மாணவர்களுக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. இதனால் ஆந்திராவில் மீண்டும் பள்ளிகள் மூடப்படுமா? என்ற கேள்வி எழுந்து உள்ளது 
 
இந்த நிலையில் நவம்பர் 10ஆம் தேதி பள்ளிகள் திறக்க திட்டமிட்டுள்ள தமிழகத்திலும் இதன் எதிரொலி இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே தமிழக அரசு பள்ளிகள் திறப்பது குறித்து மறு பரிசீலனை செய்து வருவதாகவும் இதனால் பள்ளிகள் திறப்பது பள்ளிகள் திறப்பது தாமதமாகும் என்றும் கூறப்பட்டு வருவது தெரிந்ததே