காரணமே இல்லாமல் 6 நாட்களில் 15 சிசுக்கள் பலி: என்ன நடக்கிறது அசாமில்?
அசாமில் உள்ள மருத்துவ கல்லூரி ஒன்றில் கடந்த ஆறு நாட்களில் 15 குழந்தைகள் மரணமடைந்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அசாமில் உள்ள ஜோர்ஹாத் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 15 குழந்தைகள் பலியாகியுள்ள சம்பவம் தற்போது விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது. இது குறித்து அந்த மருத்துவமனையில் கண்காணிப்பாளர் கூறியது பின்வருமாறு,
மருத்துவமனையில் உள்ள பிறந்த குழந்தைகளுக்கான சிறப்பு பிரிவில் இந்த சம்பவம் நடந்துள்ளது. இதற்கு மருத்துவ உதவி மறுக்கப்பட்டதோ அல்லது மருத்துவமனை நிர்வாகமோ காரணமல்ல.
சில நேரங்களில் மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும், போது இறப்பு நேரிட்டால் அதன் எண்ணிக்கை அதிகமாக தெரியும்.
நோயாளிகள் என்ன மாதிரியான நிலையில் மருத்துவமனைக்கு வருகிறார்கள் என்பதைப் பொறுத்தே இது மாறுபடும். இருப்பினும் இது குறித்து விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.