செவ்வாய், 16 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva
Last Updated : திங்கள், 12 பிப்ரவரி 2024 (08:22 IST)

விவசாயிகள் போராட்டம் எதிரொலி: டெல்லியில் 144 தடை உத்தரவு அமல்..!

டெல்லியில் விவசாயிகள் போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளதால் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

200 விவசாய சங்கங்களை ஒருங்கிணைத்து டெல்லியை நோக்கி பேரணி நடத்த திட்டமிட்டுள்ளது. டெல்லி சலோ என்ற பெயரில் மத்திய அரசுக்கு எதிராக டெல்லியில் பேரணி நடத்தப்  போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக டெல்லி எல்லைப் பகுதிகளில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

பயிர்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையை உறுதி செய்யும் சட்டம் இயற்ற வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 200-க்கும் அதிகமான விவசாய சங்கங்கள் நாளை ‘டெல்லி சலோ’ என்ற பெயரில் மத்திய அரசுக்கு எதிராக டெல்லியில் பேரணி நடத்தப் போவதாக அறிவித்துள்ளன.

இந்த பேரணியில் கலந்து கொள்ள தமிழகம் உள்பட நாடு முழுவதும் உள்ள விவசாயிகள் டெல்லியை நோக்கி சென்று கொண்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.

Edited by Siva