1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Abimukatheesh
Last Updated : செவ்வாய், 3 ஜனவரி 2017 (14:38 IST)

பலாத்கார முயற்சியிலிருந்து தாயை காப்பாற்றிய மகள்

உத்திர பிரதேச மாநிலத்தில் 12 வயது மகள் தனது தாயை பலாத்கார செய்ய முயன்ற 4 பேரிடம் இருந்து சண்டையிட்டு காப்பாற்றியுள்ளார்.


 

 
உத்திர பிரதேச மாநிலம் பைரேலி அருகே உள்ள கிராமம் பகுதியில் பெண் ஒருவர் தனது இரு மகள்களுடன் அவர் வசிக்கும் பகுதி அருகே இரவு நேரத்தில் நடந்து சென்றுள்ளார். அப்போது 4 பேர் திடீரென்று வழிமறித்து அந்த பெண்ண யாருமில்லாத இடத்துக்கு தூக்கி சென்றனர்.
 
அந்த பெண்ணின் மூத்த மகள்(12 வயது) தனது தாயை காப்பாற்ற அந்த 4 பேர் கொண்ட கும்பலுடன் சண்டையிட்டு போராடியுள்ளார். தாய் மற்றும் மகளின் அலறல் சத்தம் கேட்டு கிராம மக்கள் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். இதையடுத்து அந்த கும்பல் தப்பிச் சென்றது.
 
மேலும் காவல்துறையினர் அந்த 4 பேர் கொண்ட கும்பல் மீது வழக்கு பதிவு செய்து, அவர்களை தேடி வருகின்றனர்.