புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By sivalingam
Last Modified: வெள்ளி, 24 மார்ச் 2017 (04:59 IST)

16 வயது சிறுமியை அம்மாவாக்கிய 12 வயது சிறுவன்: கேரளாவில் அதிர்ச்சி சம்பவம்

தற்போதைய இண்டர்நெட் உலகில் அனைத்துமே ஆன்லைனில் கிடைப்பது போல், ஆபாசமும் ஆன்லைனில் கொட்டி கிடக்கின்றது. இதன் காரணமாகவே பிஞ்சிலேயே பழுத்து சிறுவர், சிறுமிகள் கூட கெட்டுப்போகும் வாய்ப்புகள் அதிகம் உள்ளது.


 


இதை நிரூபிப்பதுபோல் சமீபத்தில் 16 வயது சிறுமி ஒருவருக்கு குழந்தை பிறந்தது. இதுகுறித்டு கொடுக்கப்பட்ட புகார் ஒன்றின் மூலம் நடவடிக்கை எடுத்த போலீசார் கடைசியில் அந்த குழந்தைக்கு தகப்பன் யார் என்பதை கண்டுபிடித்துவிட்டனர்.

ஆனால் கண்டுபிடித்த பின்னர் அவர்களுக்கே அதிர்ச்சி. காரணம், 16 வயது சிறுமியை அம்மாவாக்கியவன் 12 வயது சிறுவன் என்பது தெரியவந்துள்ளது.விசாரணையில் இந்த தகவல் உறுதியாகியுள்ளதால் தற்போது அந்த சிறுவன் மீது போஸ்கோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.