80 ஆயிரம் ஜீவனாம்சம் தொகையை சில்லரையாக வழங்கிய நபர்.. நீதிமன்றம் அதிர்ச்சி..!
விவாகரத்து பெற்ற மனைவிக்கு ஜீவனாம்சம் தொகையை கொடுக்க வந்த கணவர், 80 ஆயிரம் ரூபாயை ஒரு ரூபாய் மற்றும் இரண்டு ரூபாய் சில்லறையாக கொடுத்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
உத்தரப்பிரதேசத்தை சேர்ந்த கணவர் ஒருவரை மனைவி விவாகரத்து செய்த நிலையில், இரண்டு லட்சம் ரூபாய் ஜீவனாம்ச தொகை கொடுக்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த நிலையில், டாக்ஸி டிரைவரான கணவர் தனது டாக்ஸியிலிருந்து 20 மூட்டைகளை இறக்கினார்.
நீதிமன்றம் அதை ஆச்சரியத்துடன் பார்த்துக் கொண்டிருந்த நிலையில், இந்த 20 மூட்டைகளிலும் ஒரு ரூபாய் மற்றும் இரண்டு ரூபாய் நாணயங்களாக மொத்தம் 80 ஆயிரம் இருந்தது. இதை தன்னுடைய மனைவிக்கு ஜீவனாம்சம் தொகையாக கொடுக்கிறேன் என்றும் அவர் கூறியதை கேட்டு, அவரது மனைவி மட்டுமின்றி நீதிமன்ற அலுவலர்களும் அதிர்ச்சி அடைந்தனர்.
இதுகுறித்த புகைப்படம் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
Edited by Siva