திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. மு‌ன்னோ‌ட்ட‌ம்
Written By Siva
Last Updated : புதன், 22 பிப்ரவரி 2023 (18:59 IST)

அனைத்து மாணவர்களுக்கும் ஸ்மார்ட்போன்: பட்ஜெட்டில் ரூ.3600 கோடி ஒதுக்கீடு..!

smartphone
உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள அனைத்து மாணவர்களுக்கும் ஸ்மார்ட் போன் வழங்கப்படும் என்றும் இதற்காக பட்ஜெட்டில் 3600 கோடி ரூபாய் கொடுக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பாஜக அரசு நடைபெற்று வருகிறது என்பதும் இம்மாநிலத்தில் நிதி அமைச்சர் சுரேஷ் கண்ணா இன்று சட்டசபையில் பட்ஜெட்டை தாக்கல் செய்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த பட்ஜெட்டின் மொத்த மதிப்பு 6.90 லட்சம் கோடி என்று தெரிவிக்கப்பட்ட நிலையில் பல முக்கிய அறிவிப்புகள் இந்த பட்ஜெட்டில் வெளியாகி உள்ளன. குறிப்பாக சுவாமி விவேகானந்தர் இளைஞர்களுக்கு அதிகாரம் அளித்தல் திட்டத்தின் கீழ் மாணவர்களுக்கு ஸ்மார்ட் ஃபோன்கள் அல்லது டேப்லெட்டுகள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்காக பட்ஜெட்டில் ரூபாய் 3600 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
 
அதேபோல் ஜலதீவன் திட்டத்திற்கு 250 கோடியும் அனைத்து மக்களுக்கும் வீடு கட்டித் தருவதற்கு 2.26 கோடியும் குடிநீர் வழங்குவதற்கும் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Siva