ஜெயலலிதா மரணம் குறித்து சி.பி.ஐ. விசாரிக்க வேண்டும்: ஜெ.தீபா வலியுறுத்தல்
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணத்தில் பல்வேறு சந்தேகங்கள் இருப்பதால் அவரது மரணம் குறித்த வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும் என தீபா வலியுறுத்தி உள்ளார்.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை செய்த ஆறுமுகசாமி ஆணையம் அளித்த அறிக்கை நேற்று சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த அறிக்கையில் பல்வேறு சந்தேகங்கள் எழுப்பப்பட்டுள்ளன. குறிப்பாக ஜெயலலிதா இறந்த தேதி குழப்பமாக உள்ளது என்று அறிவிக்கப்பட்டுள்ளது
ஒரு மாநிலத்தின் முதல்வர் இறந்த தேதியை கூட சரியாக அறிவிக்கவில்லை என்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அதுமட்டுமின்றி சசிகலா உள்பட ஒரு சிலர் மீது விசாரணை செய்ய ஆணைய அறிக்கை பரிந்துரை செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா ஜெயலலிதாவின் மரணம் குறித்து சிபிஐ விசாரிக்க வேண்டும் என்றும் சசிகலாவால் கட்டுப்படுத்தப்பட்ட அதிமுக இருந்ததால் அன்றைய காலகட்டத்தில் அது சாத்தியமாகவில்லை என்றும் ஜெயலலிதாவின் மரணம் இயற்கையானதா? என்பதிலேயே சர்ச்சை எழுந்துள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்
Edited by Siva