Daily Horoscope
✕

ராமர் கோவில் திறப்பு விழாவால் நேற்று பங்குச்சந்தை விடுமுறை.. இன்றைய நிலை என்ன?

Written By Siva
Updated: செவ்வாய், 23 ஜனவரி 2024 (09:39 IST)
நேற்று ராமர் கோவில் திறப்பு விழா காரணமாக பங்குச்சந்தைக்கு விடுமுறை அளிக்கப்பட்ட நிலையில் இன்று பங்குச்சந்தை ஆரம்பமே அமோகமாக உள்ளது என்பதும் சென்செக்ஸ் 500 புள்ளிகளுக்கு மேல் அதிகரித்துள்ளதால் முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
 
சற்றுமுன் மும்பை பங்குச் சந்தையின் வர்த்தகம் தொடங்கிய நிலையில் சென்செக்ஸ் 508 புள்ளிகள் உயர்ந்து 71 ஆயிரத்து 950 என்ற புள்ளிகளில் வர்த்தகம் வருகிறது. 
 
அதேபோல் தேசிய பங்குச்சந்தை 150 புள்ளிகள் உயர்ந்து 21,720 என்ற புள்ளிகளில் வர்த்தகம் ஆகி வருகிறது.  இந்த வாரம் முழுவதும் பங்குச்சந்தை ஏற்றத்தில் இருக்க வாய்ப்பு இருப்பதாகவும் ஆனால் அதே நேரத்தில் முதலீட்டாளர்கள் மிகுந்த ஜாக்கிரதையுடன் வர்த்தகம் செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
 
Edited by Siva
 

எல்லாம் காட்டு

சிறையில் வீட்டு உணவு கேட்டு அன்பில் மகேஷ் மனு!

போராட்ட இடங்களை தேர்வு செய்யும் உரிமை காவல்துறைக்கு மட்டுமே உள்ளது: காங்கிரஸ் கபில்சிபல்

நடிகர்களில் 3 பேருக்குதான் அரசியல் அறிவு இருக்கு!.. சீமான் இப்படி சொல்லிட்டாரே!...

சென்னை டூ மதுரை 5.35 மணி நேரம் - வந்தே பாரத்துக்கு இணையாக பறந்த வைகை ரயில்!...

மின்வாரிய ஊழியர்களுக்கு 20 சதவீத தீபாவளி போனஸ் - தமிழக அரசு அறிவிப்பு

அடுத்த கட்டுரையில்
Show comments